.சென்னையில் கஞ்சா கேக் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வரும் போதைப்பொருள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் சில நாட்களாகவே கஞ்சா கேக் என்ற புதுவகையான போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த தகவல் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் 27 வயதான ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ரோஷன் என்ற அந்த நபர் நுங்கம்பாக்கத்தில் உணவுக் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். அவரது நண்பர் தாமஸ் உடன் இணைந்து இந்த கஞ்சா கேக் தயாரித்து வந்தது விசாரணையில் அம்பலமானது. இவர் டாட்டூ கடை நடத்தி வந்தவராவார்.
நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தாமஸ் (26) என்பவைர போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் உயர் ரக போதை மாத்திரை , உயர் ரக போதை ஸ்டாம்ப் ஆகியவற்றை கல்லூரி மாணவர்கள், டி ஜே பார்ட்டிக்களில் இவர்கள் விற்பனை செய்து வந்தது பற்றி தெரியவந்து. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து பெறப்படும் மாத்திரையை பல மடங்கு லாபத்தில் சென்னையில் விற்பனை செய்கின்றார்கள்.

இவர்கள் கொடுத்த தகவலை அடுத்து ஆர்க்கிடெக் மாணவர் கார்த்திக் , பொன்னேரியை சேர்ந்த எம்.எஸ்.சி. மாணவர் ஆகாஷ் , பொறியில் மாணவர் பவன் கல்யாண் ஆகியோரை கைது செய்தனர்.
ஒரு கேக் எவ்வளவு தெரியுமா? : ரோஷன் , தாமஸ் இவர்கள் குறைவான விலைக்கு கஞ்சா வாங்கி கேக்கில் கலந்து ரூ.3,000 வரை விற்பனை செய்துள்ளார்கள். சாப்பிடும் கேக்கில் தயாரித்து விற்பனை செய்யப்படுவதால் இது யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு மாத்திரையை ரூ.1300க்கு வாங்கும் இவர்கள் அதை ரூ.3000 வரை விற்கின்றனர். இதனால் பல மடங்கு லாபத்தை இவர்கள் குவித்துள்ளனர். இதே போல கடந்த 2 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வந்துள்ளனர்.
இவர்களின் நண்பர்கள் கார்த்திக் , ஆகாஷ் , பவன் கல்யாண் ஆகியோர் மாணவர்கள் என்பதால் அவர்களின் தொடர்பில் பெங்களூரு, ஐதராபாத் போன்ற பகுதிகளில் உயர் ரக போதை பொருட்கள் இருக்கும் இடங்களை அறிந்து மாத்திரைகள் , ஸ்டாம்புகள் ஆகியவற்றை ஆர்டர் செய்து இருசக்கர வாகனம் மூலம் நேரடி வர்த்தகத்தில் இருந்துள்ளதும் இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவலாக வெளியாகியுள்ளது.
கேக் எப்படி இருக்கும் ? : இந்த கேக்கை உட்கொண்டால் 12 மணி நேரம் வரை நிலவில் மிதப்பது போல் இருக்கும் என்று கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து 33 மாத்திரைகள், 19 போதை மாத்திரை ஸ்டாம்புகள் , 10 கஞ்சா கேக்குகள் ஆகுியவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.