ஈரோடு மாவட்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகனுக்கு பெற்றோரே கஞ்சா சப்ளை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பெற்றோரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்திய வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரதாப் என்பவர் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக ஈரோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் . இந்நிலையில் பிரதாப்பை பார்ப்பதற்காக அவரது பெற்றோர் சந்திரசேகர் மற்றும் தீபா, ஈரோடு கிளை சிறைக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் தங்கள் துணி பையில் மறைத்து வைத்திருந்த 30 கிராம் அளவு கஞ்சா பொட்டலத்தை மகனிடம் கொடுக்க முயன்றதாக தெரிகிறது.
இதனை கவனித்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்ததோடு பிரதாப்பின் பெற்றோரான சந்திரசேகர் மற்றும் தீபாவை கைது செய்தனர். குற்றச் செயலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மகனை பார்க்கச் சென்ற பெற்றோர், அவருக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரம் சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சிறையில் இருக்கும் மகனை நல்வழிப்படுத்த விடாமல், அவருக்கு கஞ்சா கொடுத்து மீண்டும் குற்ற செயல் புரிய தூண்டுவதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
English summary: Parents of a sub jail detainee arrested for trying to smuggle cannabis inside sub jail.