எதிர்திசையில் பயணம் செய்தவர்களிடம் சுமார் ரூ.26 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சாலைகளில் விபத்துக்களை குறைக்க போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்திசையில் பயணம் செய்ததாக மட்டும் ரூ.26 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பெருநகர் போக்குவரத்து காவல் துறையினர் கூறியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.26 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறையினர் விதிகளை மீறுபவர்களுக்கான அபராதத்தை உயர்த்தினர். அப்படியாவது மக்கள் பாதுகாப்பாக செயல்படுவார்கள் என அபராதம் உயர்த்தப்பட்டது. தமிழக போக்குவரத்து காவல்துறையினர் அதிவேகமாக பைக்கில் செல்பவர்களிடம் இருந்து ரூ.5,000 அபராதம் வசூலிக்கின்றது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ.10,000 வசூலிக்கின்றது. அதிக நபர்களை ஏற்றிச் சென்றால் ரூ.2000 அபராதம் விதிக்கின்றது. ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதமாக செலுத்த வேண்டும். தவறான திசையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் 100 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ.1100 வசூலிக்கப்படுகின்றது. இதில் திங்கள் கிழமைகளில் மட்டும் ரூ.1300 வசூலிக்கப்படுகின்றது. அபராதத் தொகை உயர்த்தியும் இது போன்ற தவறுகளை மக்கள்திருத்திக் கொள்வதில்லை என போக்குவரத்து காவல்துறையினர் கூறுகின்றனர்.