fbpx

போலீசாருக்கு காவல் ஆணையர் வார்னிங்..!! பொதுமக்களின் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு..!!

சென்னை மாவட்டத்தில் குற்றச்செயல்களை முற்றிலும் தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், புதன்கிழமை தோறும் பொதுமக்களிடம் புகார் மனுக்களை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்வதாக கூறிய காவல் ஆணையர் அருண், கடந்த புதன் அன்று புகார் மனுக்களை நேரில் பெற்றுக் கொண்டார்.

அப்படி பெறப்பட்ட புகார் மனுக்களில் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டிருந்த மனுக்களை தனியாக பிரித்து, ”இந்த புகார் மனுக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில், சுணக்கம் காட்டினாலோ, அலைக்கழித்தாலோ, கையூட்டு பெற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மத்திய குற்றப்பிரிவில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில், சில நேரங்களில் போலீஸாரே ஆதாயம் பெறுவதாகவும், ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டியிருந்தாலோ, கைது நடவடிக்கை மேற்கொள்ள இருந்தாலோ அதுகுறித்து தனது கவனத்திற்கு வந்த பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிரடியாக கூறியுள்ளார் ஆணையர் அருண்.

Read More : இந்த பழக்கம் உங்ககிட்ட இருக்கா..? இதிலிருந்து விடுபட்டால் ஏராளமான நன்மைகளை பெறலாம்..!!

English Summary

The police should take appropriate action on the complaints made by the public.

Chella

Next Post

PMK: திருமாவளவன் கருத்துக்கு ராமதாஸ் கொடுத்த பதிலடி...!

Sat Aug 17 , 2024
Ramadas' response to Thirumavalavan's comment

You May Like