No Parking-இல் காரை நிறுத்திய இசையமைப்பாளர் அனிருத்துக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
நடிகர் அஜித்குமார், த்ரிஷா நடிப்பில் உருவாகி, திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் முதல் நாளான நேற்று ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தனர். ஒரு சில தியேட்டர்களில் அஜித்திற்கு பீர் அபிஷேகம் கூட செய்யப்பட்டது. துணிவு படம் வெளியாகி 2 ஆண்டுகள் கழித்து தற்போது, விடாமுயற்சி திரைப்படம் வெளியாகியுள்ளதால், அதன் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத், குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் விடாமுயற்சி படம் பார்க்க நேற்று சென்றிருந்த நிலையில், அப்போது அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. படம் பார்த்துவிட்டு ரசிகர்களுடன் வெளியே வந்த அனிருத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும், படத்தை பார்க்க வேண்டிய அனிருத், தனது காரை No Parking-இல் நிறுத்தியுள்ளார். இதனால், அவருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அனிருத், அபராதத்தை கட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அனிருத்தை போல பலரும் நோ பார்க்கிங்கில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்டவைகளை நிறுத்திவிட்டு அபராதம் செலுத்தினர்.
Read More : பரபரப்பை கிளப்பிய விமானம்..!! கோவையில் அரை மணி நேரமாக வானத்தில் வட்டமடித்தது ஏன்..?