fbpx

பெரம்பலூர் அருகே இளம் பெண் தற்கொலை…..! வரதட்சணை கொடுமையா அல்லது குடும்ப பிரச்சனையா……?

பெரம்பலூர் மாவட்டம் மணப்பத்தூர் கிராமத்தில் நடராஜன் பரிமளம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் சினேகா (21) இவருக்கும், விக்கி என்ற நபருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதான மகிழ்மதி என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், மாமியார் குடும்பத்தினருக்கும் சினேகாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தான் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, சினேகா மன உளைச்சலில் இருந்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், சினேகா தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். ஆனால் அவரை வக்கம்பாக்கத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வரதட்சணை கொடுமை காரணமாக சினேகா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

திருப்பதி மலைக்கு 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் செல்ல தடை..? வெளியான தகவலால் பக்தர்கள் அவதி..!!

Thu Jun 1 , 2023
திருப்பதி மலைக்கு செல்ல 15 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை விதித்துள்ளதாக தகவல் பரவியது. எனவே, ஏராளமான பக்தர்கள் தொலைபேசி மூலம் தேவஸ்தான நிர்வாகத்தை தொடர்பு கொண்டு இந்த தடை பற்றி கேட்டு தெரிந்து கொள்ள முயன்றனர். இந்நிலையில், திருப்பதி மலையின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனி ராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், ”15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வாகனங்கள் திருப்பதி மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பரவிய தகவல் […]
திருப்பதி மலைக்கு 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் செல்ல தடை..? வெளியான தகவலால் பக்தர்கள் அவதி..!!

You May Like