fbpx

சேலம் பெரியார் பல்கலை பதிவாளரின் வங்கி லாக்கரில் சிக்கிய 93.1 சவரன் தங்க நகை…!

சேலம் நகரக் காவல் துறையினர், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில், பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) தங்கவேல் என்பவரின் வங்கி லாக்கரை வெள்ளிக்கிழமை திறந்து ஆய்வு செய்தனர். அதில் 745 கிராம் தங்க (93.1 சவரன்) நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜுலை மாதம் ஜெகநாதன் துணை வேந்தராக பதவி ஏற்றார். அவரது பதவி காலம் ஜுன் 2024 வரை உள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோ கருப்பூர் காவல்துறையிடம் கொடுத்த புகாரில், துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், கணினி அறிவியல் இணை பேராசிரியர் சதீஷ் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் இணைந்து பூட்டர் அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனமும், அப்டெக்கான் போரம் என மற்றொரு அமைப்பையும் தொடங்கி உள்ளனர்.

இவர்கள் பெரியார் பல்கலைக்கழக பிரதி நிதிகளாக இருந்து கொண்டு அரசு அனுமதியின்றி துணை அமைப்புகளை தொடங்கி இயக்குனர்களாக உள்ளனர். அதனால் ஜெகநாதன், தங்கவேல், சதீஷ், பல்கலைக்கழக சட்டப்பிரிவு 19-ன் படி பொது ஊழியர்களாக உள்ளனர். புதிதாக தொழில் தொடங்க கூடாது அதற்கு பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசு அனுமதி பெற வேண்டும், விதி மீறிய இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இது குறித்து சூரமங்கலம் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையிலான காவல்துறையினர் துணை வேந்தர் ஜெகநாதனை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கருப்பூர் போலீசார் ஜெகநாதன் உள்பட 4 பேர் மீதும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, சொந்த நிறுவனம் தொடங்கி லாப நோக்கில் செயல்பட்டது. போலி ஆவணங்களை தயாரித்து தனி நிறுவனங்களை தொடங்கி யது உள்பட 8 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சேலம் நகரக் காவல் துறையினர், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில், பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) தங்கவேல் என்பவரின் வங்கி லாக்கரை வெள்ளிக்கிழமை திறந்து ஆய்வு செய்தனர். அதில் 745 கிராம் தங்க (93.1 சவரன்) நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Vignesh

Next Post

5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஆயுஷ்மான் பாரத் கணக்கு...! மத்திய அரசு வெளியிட்ட விவரம்...!

Sat Dec 30 , 2023
ஆயுஸ்மான் பவ பிரச்சாரத்தில், 5 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் பாரத் கணக்குகள் தொடங்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; நடந்து வரும் ஆயுஷ்மான் பவ பிரச்சாரத்தின் போது 5 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், மொத்தம் 4,44,92,564 ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 1,15,923 ஆயுஷ்மான் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 28.12.2023 வரையிலான தரவுகளாகும். […]

You May Like