fbpx

டீ குடிக்க போன போலீஸ்..!! வேனில் இருந்து தலைதெறிக்க தப்பியோடிய 3 குற்றவாளிகள்..!! அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரிஜேந்திரா (27) சைலேந்திரா (20), ஞானபிரசாத் (23) ஆகிய 3 உள்பட 7 பேரை போலீசார் வேனில் அழைத்து வந்தனர். நீதிமன்றத்திற்கு வெளியே வேனை நிறுத்திவிட்டு, போலீசார் தேநீர் அருந்தியுள்ளனர். அப்போது பிரிஜேந்திரா, சைலேந்திரா, ஞானபிரசாத் ஆகியோர் அங்கிருந்து தலைதெறிக்க தப்பியோடினர். இதுதொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேனுக்குள் இருந்த அவர்கள், போலீஸ் பாதுகாப்பின்றி விடப்பதை உணர்ந்து தப்பி சாலையில் ஓடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. தப்பியோடிய கைதிகள் இதுவரை யாரும் பிடிபடவில்லை. கைதிகள் தப்பியதில் அலட்சியமாக இருந்ததாக 3 எஸ்.ஐக்கள் உட்பட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க 2 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தப்பியோடிய 3 குற்றவாளிகளும் ரயில் நிலையங்களில் செல்போன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள். காவல்துறை பாதுகாப்பில் இருந்த 3 கைதிகள் தப்பியோடிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

அடுத்த அதிர்ச்சி..!! சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு உடல்நலக்குறைவு..!! மருத்துவமனையில் அனுமதி..!!

Thu Sep 21 , 2023
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் டெல்டா தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 2000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதற்கிடையே, நேற்று இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்கள், கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் இயங்கி வரும் சக்தி ஃபாஸ்ட் ஃபுட் என்ற கடையில் இருந்து 150 சிக்கன் ரைஸ் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் 26 […]

You May Like