fbpx

‘நீட் தேர்வுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம்’..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தில் கையெழுத்திட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை திமுக தொடங்கி இருந்தாலும், இதனை மாபெரும் மக்கள் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.

நீட் ஒழிப்பு போராட்டத்தில் அதிமுகவும் பங்கேற்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி இருந்து வெளியேறிய பின்னர் மாணவர்களின் உரிமைக்கு அதிமுக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கிடையே, நீட் ஒழிப்புக்கான கையெழுத்து இயக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சங்களை முன்வைத்து, குற்றசாட்டுகளை கூறி வருகிறது.

இந்த சமயத்தில், நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு எதிராக வழக்கறிஞர் எம்எல் ரவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. வழக்கறிஞர் எம்எல் ரவி தொடர்ந்து வழக்கை வாபஸ் பெற்றதால் மனுவை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படுவதாக வழக்கறிஞர் எம்எல் ரவி வழக்கு தொடர்ந்திருந்தார். கையெழுத்து இயக்கத்தால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்? என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. நீட் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு மாணவர்கள் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம். உண்மைத்தன்மையை நிரூபிக்க ரூ.1 லட்சம் டெபாசிட் ஐகோர்ட் கூறியபோது வாபஸ் பெறுவதாக மனுதாரர் பதில் அளித்தார். பொதுநல வழக்குகளை தொடர வரம்பு உள்ளது. சமுதாய நலன் இருந்தால் பொதுநல வழக்குகளை ஏற்கலாம் எனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Chella

Next Post

’வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்ட பிறகு ஏன் இப்படி பண்றீங்க’..? நடிகை அனுபரமி பரபரப்பு பேட்டி..!!

Thu Nov 2 , 2023
அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு இசையமைப்பாளர் டி. இமான் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக தெரிவித்தார். இதனை ஏதோ நான் ஒரு மூன்றாவது நபர் மூலமாக தெரிந்து கொள்ளவில்லை. நானே அனுபவபூர்வமாக உணர்ந்தேன் என பேசியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக நடிகை அனுபரமி பேசியுள்ளார். அவர் கூறுகையில், ”குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிவிடும் என்று நினைத்து இமான் உண்மையை வெளிப்படுத்துகிறாரே, […]

You May Like