fbpx

ஆணுறைகளை பறக்கவிட்டு அட்ராசிட்டி செய்த அரசியல்வாதிகள்..!! வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

பாகிஸ்தான் நாட்டில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஆணுறைகளை பலூன்களாக பறக்கவிட்டதாகச் சொல்லி இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அங்கே இந்த முறை மும்முனை போட்டி நிலவுவதாகப் போட்டி கடுமையாக இருக்கும் எனச் சொல்லப்பட்டது. இத்தேர்தலில் இம்ரான் கான் சிறையில் இருந்த நிலையில், அவரது கட்சியினர் பல ஒடுக்குமுறைகளைச் சந்தித்தனர். தற்போது வரை வெளியான தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது அவரது ஆதரவில் களமிறங்கிய சுயேட்சைகளை அதிக இடங்களில் வெல்லும் சூழலில் உள்ளனர்.

இதற்கிடையே பாகிஸ்தானில் தேர்தல் கொண்டாட்டத்தின் போது நடந்ததாகச் சொல்லப்படும் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அங்குத் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டு இருந்த போது ஆணுறை வடிவில் இருக்கும் பலூன்களை அங்குள்ள முக்கிய அரசியல் கட்சியின் தொண்டர்கள் பறக்கவிட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த பிப்.5ஆம் தேதி நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

அடிப்படை அறிவு கூட இல்லாமல் எப்படி கட்சி தொண்டர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்றே புரியவில்லை என்று பலரும் சாடி வருகின்றனர். இந்தியாவிலும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் அறிவு அவ்வளவு தான் என்றும் அவர்கள் நக்கலடித்து வருகின்றனர். சுமார் 50 நொடிகள் ஓடும் அந்த வீடியோ பாகிஸ்தானில் ஏதோ திறந்தவெளியில் எடுக்கப்பட்டது போலத் தெரிகிறது. அதில் கட்சியின் உள்ளூர் தலைவர் ஒருவர் காரில் இருந்து இறங்கி அந்த பலூன்களை பறக்க விடுகிறார். சில பலூன்களை பறக்கவிடும் அவர், அங்கிருந்த தொண்டர்களைப் பார்த்து சில நொடிகள் கை அசைக்கிறார். பின்னர் அவர் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்.

Chella

Next Post

ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி..!! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

Mon Feb 12 , 2024
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 16ஆம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து […]

You May Like