புதுச்சேரி மாநிலம் கோரிமேட்டை சேர்ந்தவர் லூர்து பெலிக்ஸ் (வயது 38). இவருக்கு சங்கரன்பேட்டை காமன்கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (31) என்பவர் பதிதாக அறிமுகம் ஆகினார். ராஜசேகர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் , அதனால் பணம் கொடுத்தால் கூடுதல் பணம் தருவதாகவும் நம்பிக்கை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதனை முழுவதுமாக உண்மை என்று நம்பிய லூர்துபெலிக்ஸ் தன்னிடம் இருந்த பணம் மற்றும் தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து ரூ.43 லட்சம் ரொக்கம் மற்றும் 15 சவரன் நகை ஆகியவற்றை ராஜசேகரிடம் கொடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் வாக்குறுதி அளித்ததுபோல் கூடுதல் பணம் தராததுடன் ராஜசேகர் தலைமறைவாகியுள்ளார். இதன் விளைவாக லூர்துபெலிக்ஸ் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் குற்றவாளிகளை வலைவீசி காவல்துறையினர் தேடிவந்த நிலையில் ராஜசேகர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அந்த விசாரணையின் போது போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது, மோசடி செய்த பணத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் கார், டி.வி., ஏ.சி., என பலவற்றை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, காவல்துறை ராஜசேகரிடம் இருந்து கார், 13 பவுன் நகைகள், ஏ.சி., டி.வி., பாஸ்போர்ட் மற்றும் பல்வேறு வங்கிகளின் காசோலைகளை என பறிமுதல் செய்திருக்கின்றனர்.