fbpx

புதுச்சேரி – தமிழகம் இடையே தற்காலிகமாக பேருந்துகள் நிறுத்தம்…

புதுச்சேரியில் 4 பேருந்துகள் கல்வீசித் தாக்குதல் நடத்தி உடைக்கப்பட்டதை அடுத்து விழுப்புரம் வழியாக செல்லக்கூடிய தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

இந்துக்களை அவமதித்து பேசியதாக திமுக எம்.பி. ஆராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் புதுச்சேரியில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்து அமைப்புகள் ஏற்கனவே முழு அடைப்பை தொடங்கிவிட்டது. இந்நிலையில் புதுச்சேரியில்  4 தமிழக பேருந்துகளை கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் சில அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்ற. முழு அடைப்பு காரணமாக புதுச்சேரியில் பேருந்து நிலையம் முக்கிய சாலைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தனியார் பேருந்துகள் , ஆட்டோக்கள்  இயக்கப்படவில்லை. இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகின்றது. புதுச்சேரி- விழுப்புரம் மார்க்கத்தில் இரண்டு தமிழக அரசு பேருந்துகள், ஒரு தனியார் சொகுசு பேருந்து உள்ளிட்ட 4 பேருந்துகள் கல்வீசி உடைக்கப்பட்டது. இதைதொடர்ந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லக்கூடிய தமிழகம் மற்றும் புதுச்சேரி பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக நகரில் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. சிறிய கடைகளும்  மூடப்பட்டுள்ளதால் நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் பரபரப்பு நிலவுகின்றது

Next Post

குழாய் உடைந்ததால் ரோட்டில் குளம் போல் தேங்கிய சமையல் எண்ணெய்: நாச வேலை காரணமா..?!

Tue Sep 27 , 2022
சென்னை துறைமுகம் பகுதியில் இருந்து திருவொற்றியூர் அருகேயுள்ள திருச்சினாகுப்பம் பகுதியில் உள்ள எண்ணெய் நிறுவனத்திற்கு, சமையல் எண்ணெய் குழாய்களின் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த குழாயில் ஏற்பட்ட விரிசலால், காசிமேடு பகுதியில் மீனவர்கள் படகு நிறுத்துமிடத்தில் சமையல் எண்ணெய் குளம் போல் தேங்கியுள்ளது. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் கப்பல்கள் மூலம் சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும்  பாமாயில் எண்ணெய், திருச்சினாகுப்பம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் […]

You May Like