fbpx

பொங்கல் பண்டிகை..!! கூடுதலாக 2 நாட்கள் விடுமுறை..!! வலுக்கும் கோரிக்கை..!! தமிழக அரசு ஆலோசனை..!!

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றுவர ஏதுவாக கூடுதலாக இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால், மக்கள் எந்த ஒரு பண்டிகையும் சிறப்பாக கொண்டாடவில்லை. ஆனால், இந்த முறை தீபாவளி பண்டிகையின்போது, மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அதற்கு அடுத்த நாளும் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, தீபத்திருநாள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு புத்தாண்டிற்கு அடுத்த நாளான ஜனவரி 2 ஆம் தேதி விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

பொங்கல் பண்டிகை..!! கூடுதலாக 2 நாட்கள் விடுமுறை..!! வலுக்கும் கோரிக்கை..!! தமிழக அரசு ஆலோசனை..!!

இந்நிலையில், அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வரவுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல எதுவாக இருக்கும் வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. போகி பண்டிகை, மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அரசு விடுமுறை வரவுள்ளது. ஜனவரி 14 முதல் 17 வரை நான்கு நாட்கள் அரசு விடுமுறை அளித்துள்ளது. ஆனால், மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால், ஜனவரி 13ஆம் தேதியும், பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு ஜனவரி 18ஆம் தேதியும் சிறப்பு கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை தமிழக அரசு ஆலோசனை நடத்தி அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

மனைவியை துண்டு துண்டுகளாக வெட்டி கால்வாயில் வீசிய கணவன்..!! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

Fri Jan 6 , 2023
மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்ட காரணத்திற்காக அவரை துண்டாக வெட்டி கால்வாயில் வீசிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேற்கு வங்கம் மாநிலம் திலிகுரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்ஸ்சாருல். இவரது மனைவி ரேனுகா காத்தூன். இருவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதியில் இருந்து ரேனுகாவை காணவில்லை என குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கணவர் […]
மனைவியை துண்டு துண்டுகளாக வெட்டி கால்வாயில் வீசிய கணவன்..!! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

You May Like