பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், 30 பணியாளர்களுக்கு நேரடியாக ஊக்கத்தொகையை வழங்கினார்.
ஆவின் பணியாளர்களுக்கு இந்தாண்டுக்கான பொங்கல் பண்டிகை ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் 1,325 பணியாளர்களுக்கு ரூ.12.58 லட்சம், மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் 2,969 பணியாளர்களுக்கு ரூ.28.47 லட்சம் மற்றும் தமிழ்நாடு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 22,895 பணியாளர்களுக்கு ரூ.228.95 லட்சம் என மொத்தம் 27,189 பணியாளர்களுக்கு ரூ.270 லட்சம் செலவில் ஊக்கத்தொகையை அமைச்சர் சா.மு.நாசர் 30 பணியாளர்களுக்கு நேரடியாக வழங்கினார்.
மேலும், தமிழ்நாடு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 603 சங்கங்களில் உள்ள 98,877 பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கு, சங்கங்கள் ஈட்டிய லாபத்தில் இருந்து ரூ.1,295.59 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கினார்.