தமிழ்நாடு ரேஷன் கடைகளில் பல்வேறு பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலையிலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளின் நிவாரண உதவியும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மகளிர் உதவித் தொகை திட்டத்தின் காரணமாக புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படாமல் இருக்கின்றன. அவை அனைத்தும் பொங்கலுக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் பல போலி ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிக்க சாத்தியக்கூறு இருந்ததால், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இன்னும் இரண்டு மாதங்களில் அவை வழங்கப்படும் என்று தெரிகிறது.