பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்பாக சர்க்கரை, பச்சரிசி, முழுக்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வேட்டி, சேலையும் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால், ரூ.1,000 ரொக்கத் தொகை பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.500 வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.470 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அதேபோல் இந்தாண்டும் 3,53,249 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.500 வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.