இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் சேர்த்து ரூ.1,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசாக ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொடர்பான புகார்களை 1957, 1800 425 5901 ஆகிய எண்களில் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்றும் விவசாயிகளிடம் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.