வருடம் வருடம் பொங்கலுக்கு அரசு சார்பில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரொக்க பணம் உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், சென்ற வருடம் கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டது.
இந்த வருடம் பொங்கல் பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடுவதற்காக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இவற்றுடன் 1000 ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
எல்லா அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இதை வழங்கப்பட உள்ளது. பொங்கல் ரொக்க பணம் தமிழகத்தில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. 1000 ரூபாய் ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்களால் விநியோகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்த தேதியில், எந்த தெருவில் உள்ளவர்கள் தொகுப்பை பெற வேண்டுமென டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும். பொங்கல் பரிசு தொகை பெறும் நாள், நேரம் போன்றவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு வீடாக இதனை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குவார்கள். அந்த நாளில் கடைகளில் நெரிசல் இல்லாமல் பணத்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் வீடுகளுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
1000 ரூபாய் வழங்குவதை வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி சென்னையில் முதலமைச்சரும், மாவட்டங்களில் அந்தந்த மாவட்டத்திற்கான அமைச்சர்களும் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.