பொங்கல் பண்டிகையையொட்டி, தொடர் விடுமுறை காரணமாக இன்றுமுதல் வரும் 31ம் தேதிவரை சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, 3 அல்லது 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், அரசு அலுவலகங்களில், இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் சில சிறப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் அதிகளவு ஆவணங்கள் பதிவுக்கு வரும் என்பதால், ஜனவரி 17-ந் தேதி வரை பொங்கல் விடுமுறை என்பதால், இன்றுமுதல் (ஜனவரி 18 முதல் 31-ந் தேதி) வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திர பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் இந்த டோக்கன்களின் எண்ணிக்கை 150-ஆக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல் 2 சார்ப்பதிவாளர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் சார்பதிவாளர் அலுவலகங்களில் தற்போது வழங்கப்பட்டு வரும் 12 தட்கல் டோக்கன் முறை அடுத்த நாட்களில் 20-ஆக உயர்த்த வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.