fbpx

பொங்கலை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்..!! லிஸ்ட் இதோ..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள புதிய படங்களின் பட்டியல்களை தற்போது பார்க்கலாம்.

கேப்டன் மில்லர்: தனுஷ், பிரியங்கா மோகன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நாளை வெளியாகவுள்ளது.

அயலான்: ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பான் இந்தியா படமாக வெளிவரவுள்ள இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும், 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்டு ஒரு முழு ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.

மிஷன் சேப்டர்-1: இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’. இத்திரைப்படத்தில் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்திலும், எமி ஜாக்சன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

மெரி கிறிஸ்துமஸ்: இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்திருக்கும் திரைப்படம் மெர்ரி கிறிஸ்துமஸ். இப்படத்தில் ராதிகா சரத்குமார், காயத்ரி சங்கர், சண்முகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரமேஷ் துராணி, ஜெய தௌராணி இணைந்து படத்தினை தயாரித்துள்ளனர். டேனியல் பி. ஜார்ஜ் மற்றும் ப்ரீதம் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

Chella

Next Post

திடீரென வந்த மனைவி நியாபகம்..!! 10 ஆண்டுகளுக்கு பிறகு கணவருடன் சேர்ந்து வாழும் நடிகை ரேவதி..?

Thu Jan 11 , 2024
80’ஸ் நடிகை ரேவதி இளைஞர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். மண்வாசனை, தேவர் மகன், மௌனராகம், புதுமை பெண் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார். அப்போது தமிழ் சினிமாவில் ரேவதிக்கு அதிக மார்க்கெட் இருந்தது. ரேவதியின் […]

You May Like