fbpx

மகளிர் உரிமைத்தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகை..!! பெண்களே ரூ.2,000 உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரப்போகுது..?

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக ஒரு கிலோ வெல்லம் வழங்க வேண்டும் என்றும் ரூ.1,000 தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டுமென்றும் கடந்தாண்டு உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன்.

இந்த வழக்கில், வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துவது தொடர்பாக அடுத்தாண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. ஆனால், தற்போது வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, தேங்காய் போன்ற பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்யவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பொங்கல் பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தலாமே? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு, ”ரூ.1,000-த்தை வங்கிக்கணக்கில் செலுத்தும் போது, குறைந்தபட்ச தொகை இருப்பில் இல்லை என்பதற்காக வங்கியில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மனுதாரர் தரப்பில், மகளிர் உரிமைத் தொகையை செலுத்தும்போது, பொங்கல் பரிசுத் தொகையையும் சேர்த்தே வங்கி கணக்கில் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதிகள், உயர்நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்தது போல் பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நுகர்பொருள் வாணிபக்கழக கூடுதல் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச.19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Read More : ஆடாதொடை மூலிகை செடியின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா..? தேனில் கலந்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

English Summary

The Madras High Court has issued a recommendation regarding the crediting of Pongal prize money to bank accounts.

Chella

Next Post

தென் கொரியாவில் என்ன நடக்கிறது?. அதிபர் பிரகடனம் செய்த அவசரநிலை!. சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்த ராணுவ சட்டம்!

Wed Dec 4 , 2024
South Korea: தென்கொரியா அரசு திடீரென இரவோடு இரவாக அவசரநிலை பிரகடணத்தை அறிவித்து சில மணி நேரங்களிலேயே வாபஸ் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவுக்கு, வடகொரியாவால் அண்மை காலமாக பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. எல்லைகளை பாதுகாப்பதில் இருநாடுகளுக்கு இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் தென்கொரியாவில் திடீரென அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல் அறிவித்தார். இந்த திடீர் […]

You May Like