fbpx

பொங்கல் பரிசுத்தொகை..!! சொன்ன தேதியில் வாங்க முடியாதவர்களுக்கு மீண்டும் வழங்கப்படுமா..?

டோக்கன் பெற முடியாதவர்கள் மற்றும் விடுபட்டு போனவர்கள் ஜன.13ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவை தமிழக அரசால் வழங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகுப்பு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படவுள்ளது. தினசரி 200 -300 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பொங்கல் பரிசுத்தொகை..!! சொன்ன தேதியில் வாங்க முடியாதவர்களுக்கு மீண்டும் வழங்கப்படுமா..?

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 9-12 ஆம் தேதி வரையிலான 4 நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. கடந்த 3 தினங்களாக தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணியானது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, டோக்கன் பெற முடியாதவர்கள் மற்றும் விடுபட்டு போனவர்கள் ஜன.13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அதிர்ச்சி ரிப்போர்ட்: 200 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் கசிந்தன...

Fri Jan 6 , 2023
200 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் ஹேக்கர்களால் திருடப்பட்டு, பின்னர் அவற்றை இணைய ஹேக்கிங் மன்றத்தில் பதிவிட்டதாக பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். 200 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளடக்கியதாகக் கூறப்படும் தரவு மீறல், நன்கு அறியப்பட்ட ஹேக்கர் தளத்தில் தோராயமாக 2 டாலருக்கு பட்டியலிடப்பட்டது. மீறலில் சேர்க்கப்பட்டுள்ள பல மின்னஞ்சல் முகவரிகளின் உண்மைத்தன்மை BleepingComputer ஆல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய இணைய பாதுகாப்பு-கண்காணிப்பு […]

You May Like