பொங்கல் பண்டிகைக்கான ரயில்வே முன்பதிவு டிக்கெட்டுகள் செப்டம்பர் 12 ம் தேதி தொடங்க உள்ளது.
ஜனவரி 10ம் தேதி முதல் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோருக்கு 12ம் தேதி ரயில்வே முன்பு ஆரம்பமாகின்றது.
2023ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை ஆகும். இதை ஒட்டி சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் பொங்கலுக்கான திட்டங்களை வகுத்துவிடுவார்கள். சொந்த ஊருக்கு செல்ல முன்பதிவு செய்யலாம். இது தொடர்பான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதில் , ’’ ஜனவரி 10ஆம் தொடங்கி பொங்கல் விடுமுறை நாட்களுக்கான முன்பதிவை செப்டம்பர் 12ஆம் தேதி முதல் IRCTC இணையதளத்தில் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் பண்டிகை நாட்களின் போது முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடும். எனவே காத்திருப்பு பட்டியல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குப்படும் எனவும் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.