பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று வெளியான நிலையில் 25.85 கோடி ரூபாய் வசூல் செய்து உலகளவில் 3 வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் வசூலைப் பதிவு செய்துள்ளது. விக்ரம், ஐஸ்வர்யாராய் பச்சன் , ஜெயம்ரவி , கார்த்தி , த்ரிஷா போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள படத்தில் ஓபனிங்கில் 25.85 கோடி ரூபாய் வசூல் செய்து 3வது இடத்தை பிடித்து சாதனைபடைத்துள்ளது.
முதல் நாளிலேயே 25.85 கோடி ரூபாய் வசூலித்தது குறித்து வர்த்தக நிபுணர் மனோபாலா விஜயபாலன் கருத்துப்படி பீஸ்ட் திரைப்படம் முதல் நாளில் 26.40 கோடி ரூபாய் ஆகும். இதை விட ஒரு கோடி குறைவாக பொன்னியின் செல்வன் பதிவு செய்துள்ளது. இதனால் 3ம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் வலிமை திரைப்படம் ரூ.36.17 கோடி வசூல் செய்து சாதனைபடைத்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதேபோல வர்த்தக நிபுணர் ரமேஷ் பாலா பதிவில் , ’’ ஏற்கனவே அமெரிக்காவில் 2 மில்லியன் வசூலை தாண்டிவிட்டதாக தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டுக்கான பாக்ஸ் ஆபீசில் தமிழ்த்திரைப்படம் மிகப்பெரிள அளவில் ஓபனிங்கில் வசூலை பெற்றுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார். அதாவது ஒரு நாளைக்கு 1 மில்லியன் வசூல் பெரும் முதல் திரைப்படம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் 1955ம் ஆண்டு கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மணி ரத்தினம் திரைப்படமாக உருவாக்கி வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.