fbpx

பொன்முடி, செந்தில்பாலாஜி வரிசையில்!… சிக்கும் அடுத்த 10 அமைச்சர்கள் லிஸ்ட் ரெடி!… அவர்களுக்கும் விரைவில் தீர்ப்பு!… அண்ணாமலை!

ஊழல் தொடர்பாக பொன்முடி, செந்தில்பாலாஜி வரிசையில் மேலும் 10 பேர் பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கான தீர்ப்பு விரைவில் வரும். அதன் பிறகு, இலாக்கா உள்ள அமைச்சர்களை காட்டிலும் இலாக்கா இல்லாத அமைச்சர்கள் தான் தமிழகத்தில் அதிகம் இருப்பார்கள் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நேற்று மேற்கொண்டார். திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்துக்கு வந்துள்ளது. 2028-ம் ஆண்டில் 3-வது இடத்துக்கு முன்னேறும். 2047-ம் ஆண்டில் உலகில் முதல் இடத்துக்கு இந்தியா வர பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. அது சரித்திர தேர்தல். காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் ஊழல் பெருகியது. தனிப் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகள் பெரிய ஊழலில் ஈடுபட்டனர். பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. பிரதமர் மோடி தலைமையில் 75 அமைச்சர்கள் உள்ளனர். இதில், ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியுமா?

அதுவே, தமிழகத்தில் 35 அமைச்சர்களில் 11 பேர் மீது ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 8 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராகவே தொடர்கிறார். அடுத்து பொன்முடி. இவர்கள் 2 பேரை தவிர மேலும் 10 பேர் பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கான தீர்ப்பு விரைவில் வரும். அதன் பிறகு, இலாக்கா உள்ள அமைச்சர்களை காட்டிலும் இலாக்கா இல்லாத அமைச்சர்கள் தான் தமிழகத்தில் அதிகம் இருப்பார்கள்.

கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 33 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டது. குஜராத் மாநிலத்தில் 26 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டது. தமிழகத்தில் வெறும் 6.60 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. குஜராத், உ.பி போன்ற மாநிலங்களில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் ஒரு ரூபாய் கூட லஞ்சம் தர வேண்டியதில்லை. ஆனால், தமிழகத்தில் முதலவர் குடும்பத்தாரையும், திமுக ஆடிட்டரை சந்திக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

Kokila

Next Post

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்...! சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை...!

Thu Feb 1 , 2024
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வணிக ரீதியான LPGக்கான விலை திருத்தங்களை அறிவித்துள்ளது. 19 கிலோ வணிக ரீதியிலான எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.14 உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் புதிய விலை இன்று (வியாழக்கிழமை, 01 பிப்ரவரி) முதல் அமலுக்கு வருகிறது. விலை உயர்வுக்குப் பிறகு, டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் சில்லறை விற்பனை விலை இப்போது ரூ.1,769.50 ஆக இருக்கும். இருப்பினும், உள்நாட்டு […]

You May Like