fbpx

தாமாகவே முன்வந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் பொன்முடி..? பரபரப்பு தகவல்..!!

2006-2011ஆம் ஆண்டு நடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலட்சுமி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை 2017இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது 39 சாட்சியங்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட புலன் விசாரணை ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பொன்முடி தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை சாட்சியங்களிடம் உண்மை தன்மை இல்லை. மனைவியின் வருமானத்தை என்னுடைய வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கெட்டுள்ளனர் என்று வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்தது செல்லாது. டிசம்பர் 21ஆம் தேதி அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தீர்ப்பளித்தார். இதற்கிடையே, அமைச்சர் பொன்முடிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், எம்.எல்.ஏ., அமைச்சர் பதவி பறிபோகும். அதேபோல், தண்டனை காலம் முடிந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.

இந்நிலையில், தீர்ப்பு வந்த உடனே பொன்முடியின் எம்எல்ஏ பதவி பறிபோனதால் அமைச்சராக நீடிக்க முடியாது. இதனால்ம் நேற்று அவரின் காரில் இருந்த தேசியக்கொடி அகற்றப்பட்டு விட்டது. அவர் விரைவில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு உச்சநீதிமன்றத்தை அணுகி இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்குவது மட்டும் தான்.

Chella

Next Post

’பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்றவற்றை வங்கிக் கணக்குகளில் செலுத்தலாமே’..!! சென்னை ஐகோர்ட் யோசனை..!!

Wed Dec 20 , 2023
பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பலன்கள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகள் மூலம் வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்திருந்தது. அதன்படி, கூட்டுறவு சங்கங்களில் வட்டி வருவாய் 40,000 ரூபாய்க்கு அதிகமானால், வருமான வரிச்சட்டத்தின் 194A, 194N ஆகிய பிரிவுகளின்கீழ் வருமானவரி பிடித்தம் செய்ய வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் […]

You May Like