fbpx

பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோகிறது..? தேர்தலில் போட்டியிடவும் தடை..? டிச.21இல் தீர்ப்பு..!!

2006-2011ஆம் ஆண்டு நடந்த திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலட்சுமி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது 39 சாட்சியங்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட புலன் விசாரணை ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பொன்முடி தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை சாட்சியங்களிடம் உண்மை தன்மை இல்லை. மனைவியின் வருமானத்தை என்னுடைய வருமானமாக லஞ்ச ஒழிப்பு துறை கணக்கெட்டுள்ளனர் என்று வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்தது செல்லாது. டிசம்பர் 21ஆம் தேதி அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தீர்ப்பளித்தார். இதனால் திமுகவினர் கலக்கத்தில் உள்ளனர். ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் உள்ள நிலையில் அமைச்சர் பொன்முடிக்கும் சிறை உறுதியாகும் நிலை இருக்கிறது.

அமைச்சர் பொன்முடிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், எம்.எல்.ஏ., அமைச்சர் பதவி பறிக்கும். அதேபோல், தண்டனை காலம் முடிந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

காசுக்காக மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்.! 23 வயது பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு.! 3 பேர் கைது.!

Tue Dec 19 , 2023
மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் காசுக்காக மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கணவர் உட்பட 3 நபர்களை கைது செய்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் தனது பெற்றோருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் தனது கணவர் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து தன்னை […]

You May Like