fbpx

‘பொன்னியின் செல்வன்’ டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்.. அமேசான் பிரைம் வீடியோவுக்கு இத்தனை கோடிக்கு விற்கப்பட்டதா..?

மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார்.. சோழர்களின் வரலாற்றை பேசும், கல்கி கிருஷ்ண மூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படைக் கொண்டு, பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ், நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, மற்றும் மோகன் ராமன் உள்ளிட்ட பல நடிகர்கள் உள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.. இப்படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது.. சமீபத்தில், பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வனின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமை (பாகம் 1 மற்றும் 2) அமேசான் பிரைம் வீடியோவுக்கு மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம் இன்னும் சில மாதங்களில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், பொன்னியின் செல்வனின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமை அமேசான் நிறுவனத்திடம் 125 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் சாட்டிலைட் உரிமை சன் டிவிக்கு பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வரும் 18-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது..

Maha

Next Post

நீட் தேர்வு முடிவுகள்..! தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

Mon Sep 12 , 2022
நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில், புதிய விவரங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7ஆம் தேதி தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டன. இதில், தமிழ்நாடு மாணவ, மாணவிகள் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில், புதிய விவரங்ளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், 17,972 பேர் தேர்வு எழுத பதிவு […]

You May Like