fbpx

பொன்னியின் செல்வன் படத்தின் முன்பதிவு தொடங்கியது..

பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிதிரைக்கு வர இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் . இதில் , விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி , சரத்குமார், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். ’’பொன்னியின் செல்வன்’’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆதித்த கரிகாலனாக விக்ரம் , அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி , சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத் தேவனதாக கார்த்தி , குந்தவையாக திரிஷா , ஐஸ்வர்யாராய்பச்சன்நந்தினி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். மேலும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும் , சோபிதா வானதியாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டையராகவும் , பார்த்திபன் சின்ன பழுவேட்டையராகவும் நடித்துள்ளனர்.

தமிழ் , தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து , ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. காலை 4.30 சிறப்பு காட்சிகள் வேகமாக முன்பதிவு நிறைவு பெற்று வருகின்றது.

Next Post

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு? . ..

Sat Sep 24 , 2022
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு , புதுவை, காரைக்கால்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ’’ 24.9.2022 முதல் 26.9.2022 வரை தமிழ்நாடு […]

You May Like