போப் பிரான்சிஸ், சுவாச நோய்த்தொற்றால் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இத்தாலி: கடந்த சில நாட்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து போப் பிரான்சிஸ், வியாழன் அன்று சுவாச நோய்த்தொற்றால் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் முற்றிலும் குணமாகும் வரை சிகிச்சைக்காக ரோம் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
86 வயதான போப், நுரையீரலின் ஒரு பகுதியை அகற்றினார், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜூலை 2021 இல் ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ்க்கு பெருங்குடலின் 33 சென்டிமீட்டர் அகற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.