கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ் (வயது 88). இவருக்கு கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் 5 வாரங்களுக்குமேலாக சிகிச்சையில் இருந்து போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், வாடிகனில் உள்ள இல்லத்தில் காலமானார்.
இந்நிலையில், தேவாலயத்தில் அவரின் உடல் 3 நாட்கள் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். பின்னர், இன்று வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா தேவாலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் கத்தோலிக்க மதத் தலைவர்கள், உலகத் தலைவர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
Read More : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளி ஆதில் அகமது தோகர்..!! வெளியான அதிர்ச்சி பின்னணி..!!