fbpx

ஜெயிலுக்கு சென்ற போப் பிரான்சிஸ்!… பெண் கைதிகளின் கால்களை முத்தமிட்டு சடங்கு!… ஏன் தெரியுமா?

போப் பிரான்சிஸ் ஜெயிலுக்கு நேரில் சென்று பெண் கைதிகளின் காலை முத்தமிட்டு புனித சடங்கை நிகழ்த்தினார்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்து அவர்களது பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில் இந்த சடங்கு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார். பின்னர் கைதிகளின் பாதங்களுக்கு அவர் முத்தமிட்டார். வழக்கமாக இதற்கு முன்பு போப் பதவி வகித்தவர்கள் வாடிகன் தேவாலயத்தில் தான் இதனை கடைபிடிப்பார்கள்.

ஆனால் இதனை மாற்றி போப் பிரான்சிஸ் முதன் முறையாக ஜெயிலில் இந்த புனித சடங்கை நடத்தி உள்ளார். இதேபோல முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Readmore: Shock: விலங்குகளுக்கு தொற்று பரவ மனித இனமே முதல் காரணம்!… அதிர்ச்சியளிக்கும் ஆய்வு!

Kokila

Next Post

அசத்தும் இந்தியா...! வெடிமருந்து, டார்பிடோ ஏவுகணை படகு...! கடற்படையிடம் ஒப்படைப்பு..!

Sat Mar 30 , 2024
இந்தியக் கடற்படைக்காக, தானேயில் உள்ள எம்எஸ்எம்இ ஷிப்யார்ட், திருவாளர்கள் சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட, ஏசிடிசிஎம் படகு 11 திட்டத்தின் ஒரு பகுதியாக ‘வெடிமருந்துகள் மற்றும் டார்பிடோ ஏவுகணை படகு, எல்எஸ்ஏஎம் 18., மும்பையில் உள்ள கடற்படை கப்பல்கட்டும் தளத்தில் (கரன்ஜா) ஒப்படைக்கப்பட்டது. 11 ஏசிடிசிஎம் படகு கட்டுவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தானேவில் உள்ள சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இடையே 2021, மார்ச் […]

You May Like