கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ் (வயது 88). இவருக்கு கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்து போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை வாடிகனில் உள்ள இல்லத்தில் காலமானார். காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் உயிர் பிரிந்ததாக வாடிகன் அரசு தெரிவித்தது.
ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற போப் பிரான்சிஸ், 12 வயது இருக்கும்போதே அமலியா டாமோன்டே என்பவருக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக, பல ஆண்டுகள் கழித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அமலியா டாமோன்டே நேர்காணல் அளித்திருந்தார். அதில் தான், பெர்கோக்லியோ அளித்த கடிதத்தை நினைவு கூர்ந்தார்.
அவர் கூறுகையில், ”ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ எழுதிய கடிதம் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. ஒரு காகிதத்தில் வீடு வரைந்திருதார். அதன் மேற்கூரை சிவப்பு நிறத்தில் கலர் அடிக்கப்பட்டிருந்தது. எதிர்காலத்தில் நம் திருமணத்துக்குப் பிறகு உனக்காக நான் வாங்கப்போகும் வீடு இதுதான்” என அக்கடிதத்தில் எழுதியிருந்தது. மேலும், “நான் உன்னைத் திருமணம் செய்யவில்லை என்றால், பாதிரியாராகச் சென்றுவிடுவேன்” எனவும் அந்த கடிதத்தில் பெர்கோக்லியோ குறிப்பிட்டிருந்தார்.
அந்த வயதில் என்னுடைய பெற்றோர் மிகவும் கண்டிப்புடன் இருந்ததால், பிற்காலத்தில் அந்த கடிதம் கவனிக்கப்படாமலேயே போனது. ஒரு பையனிடமிருந்து உனக்கு கடிதம் வருகிறதா? என ஆவேசத்துடன் பேசி என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். நாங்கள் இருவரும் சந்திக்காதபடி என் தாய் என்னை விலக்கியே வைத்திருந்தார்” என டாமோன்டே தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து, நீண்ட காலத்திற்கு பிறகு போப் பிரான்சிஸ் குடும்பம் அந்த பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு குடிபெயர்ந்த நிலையில், காதலி அமலியா டாமோன்டேவுக்கும் திருமணம் நடைபெற்றது. பிறகு, அமலியா டாமோன்டே மீண்டும் அவரைத் தொடர்பு கொள்ள நினைக்கவில்லை.
Read More : கரண்ட் பில்லை நினைத்து ஏசி வாங்கவே பயப்படுறீங்களா..? ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா..?