fbpx

பெரும் சோகம்!. பிரபல போஜ்புரி பாடகி சாரதா சின்கா காலமானார்!. பிரதமர் மோடி இரங்கல்!

பிரபல போஜ்புரி பாடகியும், நாட்டுப்புற கலைஞருமான பத்மஸ்ரீ விருது பெற்ற சாரதா சின்கா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.

பீஹாரைச் சேர்ந்த சாரதா சின்ஹா, தன் நாட்டுப்புறப் பாடல்களால் மக்களை பெரிதும் கவர்ந்தவர்.இவர், போஜ்புரி மற்றும் மைதிலி ஆகிய மொழிகளில் நாட்டுப்புறப் பாடல்களை பாடியுள்ளார். அவருக்கு நம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பீகார் கோகிலா’ என்று அன்புடன் அழைக்கப்படும் பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷண் விருது பெற்ற பாடகி சாரதா சின்ஹாவுக்கு, கடந்த 2017ம் ஆண்டு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அதற்கான சிகிச்சைகளை அவர் மேற்கொண்டார். இந்நிலையில், திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ” செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு காலமானார். சாரதா சின்ஹா மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Readmore: ஒரே நாடு ஒரே தேர்தல் அமலா?. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 2024 எப்போது?. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

English Summary

Popular Bhojpuri singer Sarada Singha passed away!. Condolences to Prime Minister Modi!

Kokila

Next Post

இன்று 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு...! வங்க கடலில் 55 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று..‌!

Wed Nov 6 , 2024
Heavy rain is likely in 9 districts of Tamil Nadu today, according to the Meteorological Department.

You May Like