பிரபல கன்னட பின்னணி பாடகர் ஷிவமோகா சுப்பண்ணா பெங்களூருவில் இன்று காலமானார்.. அவருக்கு வயது 83..
பிரபல கன்னட பாடகர் ஷிவமோகா சுப்பண்ணாவுக்கு நேற்றிரவு நெஞ்சு வலி ஏற்பட்டது.. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவரின் மறைவுக்கு கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
“காடு குதிரை” படத்தில் “காடு குதிரை ஓடி பந்திட்ட” என்ற பாடலுக்காக பின்னணிப் பாடகருக்கான சுப்பண்ணாவுக்கு தேசிய விருது கிடைத்தது.. இதன் மூலம் தேசிய விருது பெற்ற முதல் கன்னடர் என்ற பெருமையை அவர் பெற்றார்..
கன்னடத்தில் கவிதைகளை இசையமைக்கும் வகையிலான ‘சுகம சங்கீதா’ துறையில் தனது பணிக்காக அறியப்பட்ட சுப்பண்ணா, பிரபல கவிஞர்களான குவெம்பு மற்றும் தாரா பேந்திரே போன்றவர்களின் பாடல்களையும் பாடியுள்ளார், மேலும் பல விருதுகளையும் கவுரவங்களையும் பெற்றுள்ளார். ஆகாஷ்வானி மற்றும் தூர்தர்ஷன் ஆகியவற்றில் பல பாடல்களை அவர் பாடியுள்ளார்.. அவர் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.