லத்திகா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். அந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ந்து, நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார். குறிப்பாக, சந்தானத்துடன் அவர் இணைந்து நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்திற்கு பிறகு பவர் ஸ்டாருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், பெரிதளவில் ஓடவில்லை என கூறப்படுகிறது.
மருத்துவரான பவர்ஸ்டார் சீனிவாசனும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சென்னையில் ஒரு மருத்துவமனை நிர்வாகித்து வந்துள்ளார். இந்நிலையில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று மதியம் திடீரென்று உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில், அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.