fbpx

பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான நந்தமுரி தாரக ரத்னா மரணம்.. திரையுலகினர் இரங்கல்…

பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான நந்தமுரி தாரக ரத்னா நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டி ராமராவ்வின் பேரனும், பிரபல ஒளிப்பதிவாளர் மோகன கிருஷ்ணாவின் மகனுமான நந்தமுரி தாரக ரத்னா 2002-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.. அவர் பதாத்ரி ராமுடு, அமரதி, நந்தீஸ்வரது, மனமந்தா, எதிரிலேனி அலாக்செண்டர், ராஜா செய் வேஸ்தே போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.. 2009ம் ஆண்டு அமராவதி படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்..

அந்த படத்திற்காக, அவருக்கு ஆந்திர மாநில அரசின் சிறந்த வில்லனுக்கான நந்தி விருது வழங்கப்பட்டது… பின்னர் முழுநேர அரசியலில் அவர் ஈடுபட தொடங்கினார்.. சமீப காலமாக தெலுங்கு தேசம் கட்சியிலும் இணைந்து பணியாற்றிவந்தார். அந்த வகையில் கடந்த ஜனவரி 27ம் தேதி சந்திரபாபு நாயுடு மகன் நரலோகேஷின் பாதயாத்திரையில் கலந்துகொண்டார்.

சித்தூர் மாவட்டத்தில் நடந்த பாதயாத்திரையில் கலந்துகொண்டபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.. இதை தொடர்ந்து அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு நாராயண ஹ்ருதயாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவர், கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவரின் உடல்நிலை கவலைக்கிடமானது.. இதை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார்..

நந்தமுரி தாரக ரத்னாவின் மறைவு என்டி ராமாராவ் குடும்பத்தில் மட்டுமின்றி, தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பல்வேறு திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அவரின் இறுதி சடங்கு இன்று மாலை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. நந்தமுரி தாரக ரத்னாவுக்கு அலெக்யா ரெட்டி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

இன்ஸ்டாகிராமில் புதிய வசதியை அறிமுக செய்த மெட்டா! ஃபேஸ்புக்கிலும் கொண்டுவர திட்டம்!... விவரம் இதோ!

Sun Feb 19 , 2023
இன்ஸ்டாகிராமில் பிராட்காஸ்ட் சேனல் என்னும் பிரத்யேக வசதியினை மெட்டா புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை ஃபேஸ்புக் மற்றும் மெசெஞ்சரிலும் விரைவில் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் இணையதள பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பலவற்றில் தங்கள் கணக்குகளை தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் என பலரையும் பின்தொடர்கின்றனர். மேலும், இளைஞர்கள் மத்தியில் […]
’

You May Like