கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் பைக் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல பைக் ரைடரான யூடியூபர் டிடிஎஃப் வாசன். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்ட்டு வெளியே வந்தார். அவருடைய ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சமீபத்தில் கார் ஓட்டிச்சென்ற டிடிஎப் வாசன், தான் கம்பேக் கொடுத்துவிட்டேன் என ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்டிருந்தார். அதே போல் கடந்த 15-ம் தேதி இரவு 7.50 மணிக்கு மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில், பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், டிடிஎஃப் வாசன் செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டியுள்ளார். இதை அவரது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதை அடுத்து அவர் மீது சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளதோடு போலீசாரை டேக் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து மதுரை மாநகர ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டரும், சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து வர மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போலீசார் யூடியூபர் டிடிஎஃப் வாசநை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இருசக்கர வாகன விபத்து சிக்கி கைது, லைசன்ஸ் கேன்சல் செய்யப்பட்டது, உதிரிபாகன விற்பனை கடைக்கு நோட்டீஸ் என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிய டிடிஎஃப் வாசன் தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
Read More: முக்கிய அறிவிப்பு: பள்ளிகள் திறந்த முதல் நாளே… ஆதார் பதிவு தொடக்கம்…!