fbpx

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்..!! கரூர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர், அதே பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு யூடிபில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தங்கள் யூடியூபில் விளம்பரம் செய்தால் உங்கள் நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளரும் என ஆசைவார்த்தை கூறியதால், கிருஷ்ணன் தனது மனைவியிடம் இருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் பெற்று விக்னேஷ்வரனிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், விக்னேஷ் சொன்னபடி நடந்து கொள்ளாததால், விக்னேஷை தொடர்பு கொண்ட கிருஷ்ணன், தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால், பணம் தர முடியாது எனக்கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, விக்னேஷ் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகாரளித்தார். பின்னர், விக்னேஷை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, அந்த யூடியூப் நிறுவனத்தின் உரிமையாளர் சவுக்கு சங்கரை புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து கடந்த 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது காவல்துறையினரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி, 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், விசாரணை முடிந்து இரண்டாவது முறையாக சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, சவுக்கு சங்கர் தரப்பில் இந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் கோரப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Read More : ஒருமுறை டெபாசிட் செய்தால் மாதந்தோறும் நல்ல வருமானம் பெறலாம்..!! இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

English Summary

Karur Criminal Court has granted bail to YouTuber Chavuk Shankar in money laundering case.

Chella

Next Post

அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

Wed Jul 24 , 2024
The Tamil Nadu government has announced that the new ration cards will be issued from next month.

You May Like