fbpx

60 மாணவிகளின் ஆபாச வீடியோ..! காதலனுக்கு அனுப்பிய காதலி..! மாணவிகள் தற்கொலை முயற்சி..!

சண்டிகர் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் 60 பேரின் குளியல் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானதால், சில மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவி ஒருவர், விடுதியில் தங்கி படிக்கும் 60 மாணவிகளின் குளியல் வீடியோக்களை சிம்லாவில் உள்ள அவரது காதலனுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து, அந்த வீடியோக்கள் இணையதளங்களில் வெளியானதால், அதிர்ச்சியடைந்த மாணவிகள் இரவு பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் போராட்டத்தில் குதித்தனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீடியோக்களை எடுத்து காதலனுக்கு அனுப்பியதாக கூறப்படும் மாணவியை கைது செய்தனர்.

60 மாணவிகளின் ஆபாச வீடியோ..! காதலனுக்கு அனுப்பிய காதலி..! மாணவிகள் தற்கொலை முயற்சி..!

போராட்டத்தின் போது மாணவி ஒருவர் சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார். அவரை மீட்ட சக மாணவிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்ட மாணவி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரூபிந்தர் கவுர் தெரிவித்துள்ளார். மாணவிகள் அமைதியாக இருக்கும் படி அம்மாநில பள்ளிக்கல்வி அமைச்சர் ஹெச்எஸ் பெயின்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார். நள்ளிரவில் மாணவிகள் ஒன்று திரண்டு திடீரென போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

60 மாணவிகளின் ஆபாச வீடியோ..! காதலனுக்கு அனுப்பிய காதலி..! மாணவிகள் தற்கொலை முயற்சி..!

மேலும், இணையதளத்தில் வீடியோக்கள் கசிந்ததால் மனமுடைந்த சில மாணவிகள், கல்லூரி வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Chella

Next Post

’ப்ளூ’ காய்ச்சல் எதிரொலி..! பள்ளிகளுக்கு விடுமுறை..! முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை..!

Sun Sep 18 , 2022
தமிழகத்தில் ’ப்ளூ’ காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் விதமாக, சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் சற்று அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், ’ப்ளூ’ வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக நாளுக்கு நாள் மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, குழந்தைகளிடையே இந்தக் காய்ச்சல் […]
’ப்ளூ’ காய்ச்சல் எதிரொலி..! பள்ளிகளுக்கு விடுமுறை..! முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை..!

You May Like