ஆபாச வீடியோக்களை அதிகம் தேடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இணைய சேவை உலகில் இந்தியா தற்போது பல மடங்கு ஏற்றம் கண்டுள்ளது. தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகியுள்ளது. தெரியாத எந்தவொரு விஷயத்திற்கும் பதிலளிக்கும் விதமாக கூகுள் தேடுபொறியும் உள்ளது. இந்நிலையில், கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
விக்கிமீடியா பவுண்டேஷன் எனும் அமைப்பு இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடல்களில் சுமார் 11% இந்தியர்களால் செய்யப்பட்டவை. அதில் ஆபாசம் தொடர்பான தேடல்கள் தான் முதலிடத்தில் உள்ளன. குறிப்பாக ‘xxx’, ‘sex’ மற்றும் ‘xxx_film_series’ ஆகிய சொற்களுடன் தொடர்புடைய பக்கங்கள் அதிக ‘இணைப்பு கிளிக்குகளை’ பதிவு செய்துள்ளன.
அதன்படி, கடந்த மே மற்றும் ஜூலை மாத கால இடைவெளியில், ‘xxx’ என்ற வார்த்தையை தேடி அதற்கு கிடைத்த பரிந்துரைகளை 23.1 லட்சம் இந்தியர்கள் கிளிக் செய்து உள்ளே நுழைந்துள்ளனர். ‘sex’ என்ற வார்த்தையை டைப் செய்து அதற்கு கிடைத்த பரிந்துரைகளை கிளிக் செய்து 22.7 லட்சம் பேர் உள்ளே நுழைந்துள்ளனர். அதேபோன்று, ‘xxx_film_series’ என்ற வார்த்தையை வைத்து 20.8 லட்சம் பேர் உள்ளே நுழைந்துள்ளனர்.
‘xxx’ என டைப் செய்து கூகுளில் தேடுவதில் இந்தியா மட்டுமின்றி பல ஆசிய நாடுகளும் முன்னிலையில் உள்ளன. அந்த வகையில் 12 லட்சம் கிளிக்ஸ்கள் உடன் பாகிஸ்தான் 2-வது இடத்தில் உள்ளது. வங்கதேசத்தில் 9 லட்சம் கிளிக்ஸ்கள் உடன் ‘xxx’ எனும் வார்த்தை தேடுதலில் முதலிடம் வகிக்கிறது. இதே வார்த்தை நேபாளத்திலும் ஒரு லட்சம் கிளிக்ஸ்களை பெற்று நாட்டின் தேடுதலில் முதலிடம் பிடித்துள்ளது. இலங்கையில் 64,000 கிளிக்ஸ்கள் உடன் ‘sex’ எனும் வார்த்தை தேடுதலில் முதலிடத்தில் உள்ளது.