இன்று முதல் நாடு முழுவதும் தபால் நிலைய ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கமலேஷ் சந்திரா ஊதியக் குழு பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளதால் நாடு முழுவதும் தபால், பார்சல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரை செய்ததை உடனே அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், கிராமிய ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கி பணி நிரந்தரப்படுத்தவும், மத்திய நிர்வாக தீர்ப்பாயமும், சென்னை நிர்வாகத் தீர்ப்பாயமும் வழங்கிய தீர்ப்பின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.