தலைநகர் டெல்லியில் சுமார் 970 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். காலை 7:30 மணியளவில் தொடங்கிய முதல் கட்ட விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி சர்வ மத பூஜைகளுடன் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் கட்ட நிகழ்வானது பகல் 12 மணியளவில் ஆரம்பமானது. அப்போது நாடாளுமன்ற வளாகத்திற்கு பிரவேசம் செய்த பிரதமர் மோடி சாவர்க்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதனைத் தொடர்ந்து மக்களவைக் கொள் பிரவேசித்த பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரவோசை எழுப்பி வரவேற்றனர்.
இதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனையடுத்து நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டதன் பின்னணி தொடர்பாக மக்களவையில் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டிருக்கிறது. பின்னர் நரேந்திர மோடி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மாநிலங்களவை துணை சபாநாயகர் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து தபால் தலை மற்றும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 ரூபாய் நாணயத்தையும் மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.