fbpx

அஞ்சல் துறை கார்ப்பரேட்டிடம் செல்கிறதா…? சமூக வலைத்தளத்தில் வரவும் செய்தி…! உண்மை என்ன…?

அஞ்சல் துறை செயல்பாடுகளில் அதன் சேவை சங்கங்களின் பணி முக்கியமானதாகும். இவை 1993ம் ஆண்டில் வகுக்கப்பட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும். இந்நிலையில், அகில இந்திய சி-பிரிவு அஞ்சல் ஊழியர்கள் தொழிற்சங்கம் மற்றும் தேசிய அஞ்சல் ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் செயல்பாடுகளில் முறைகேடுகள் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்தப் புகார்கள் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது 2023 ஏப்ரல் 25 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் சில ஊழியர் சங்கத்தினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அஞ்சல் துறையை தனியார்மயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக பொய்யான தகவல்கள் சிலரால் பரப்பப்படுகிறது.

அஞ்சலங்களை கார்ப்பரேட்மயமாக்குதல் அல்லது தனியார்மயமாக்குதலுக்கான எந்தத் திட்டமும் இல்லை என்பதை அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அஞ்சலகங்கள் மூலம் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் உள்ளிட்டவற்றை அரசு வழங்கி வருவதுடன் அஞ்சல் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது.

Vignesh

Next Post

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை..! 9,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்...! அமித் ஷா நடவடிக்கை...!

Fri May 5 , 2023
மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் நிலமையை மாநில முதலமைச்சரிடம் விசாரித்தார். மணிப்பூரில் பழங்குடி மக்களுக்கும் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக இருந்து வந்த மோதல்‌ திடீரென வன்முறையாக மாறியது. பழங்குடி ஒற்றுமை நடைபயணம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது, இதனால் மோதல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. மோதல் காரணமாக இதுவரை 9,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த பணி தொடர்ந்து நடைபெற்று […]

You May Like