fbpx

முதுகலை முதலாம் ஆண்டு முதல் பருவ கட்டணம் ரூ.4,500 மட்டுமே…! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!

தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலை (M.A. Tamil) மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு (Five Year Integrated M.A. Tamil) ஆகியன இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகின்றது. 2023-24ஆம் கல்வியாண்டிற்கான இப்பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மாணவர்கள் நலன் கருதி 22.09.2023 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டு நேரடி சேர்க்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட படிப்புகளில் பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள்/தகவல்கள் மற்றும் விண்ணப்பங்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்துக் கொள்ளலாம். ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை ரூ.3700 செலுத்த வேண்டும். தமிழ் முதுகலை முதலாம் ஆண்டு முதல் பருவ கட்டணம் ரூ.4500 ஆகும். இரண்டு முதல் பத்தாம் பருவம் வரை பருவக் கட்டணம ரூ.1500 செலுத்த வேண்டும். இரண்டு முதல் நான்காம் பருவம் வரை பருவக் கட்டணம் ரூ.2000 வீதம் செலுத்த வேண்டும்.

இருபாலருக்கெனத் தனித்தனியே கட்டணம் இல்லா தங்கும் விடுதி வசதி உள்ளன. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரில் இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை. மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600-113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில் அளித்தல் வேண்டும். மேலும் தகவல் பெற மேற்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Vignesh

Next Post

பழனி முருகன் கோயிலில் இன்றுமுதல் ஒருமாதத்திற்கு ரோப் கார் சேவை இயங்காது!… கோயில் நிர்வாகம்!

Sat Aug 19 , 2023
பழனி முருகன் கோயிலில் இன்றுமுதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் தரிசனத்திற்காக வரும் மக்கள் ரோப் கார் அல்லது வின்ச் அல்லது நடைபாதை இவைகளை பயன்படுத்தி மலையேறி சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஒரு மாதம் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. […]

You May Like