பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் எடிட் செய்யப்படும் புகைப்படங்களை வெளியிடுவது காவல்துறை சட்டத்தின் 12(ஓ) பிரிவின் கீழ் குற்றமாகாது என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டில் சிரிய ஆர்த்தடாக்ஸ் பாதிரியார்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, போராட்டத்தை சித்தரிக்கும் வகையில் புகைப்படத்தை எடிட் செய்ததாகவும் அதை பேஸ்புக்கில் வெளியிடுவதற்கு முன்பு பேனரில் வார்த்தைகளை மாற்றியதாகவும் பாதிரியார்களை அவதூரு செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது. பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைதளங்களில் அவதூறான பதிவுகள் தொடர்ந்து பரவி வருகின்றன. ஆனால் இதில் ஈடுபடுபவர்களுக்கு சரியான தண்டனை இல்லை என்றும் சட்டமன்றம் இந்த அம்சத்தை தீவிரமாக கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு கேரள காவல்துறையின் பிரிவு 120(ஓ)-ன் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிரிய யாக்கோபைட் சர்ச் பாதிரியார் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன் அமர்வு, இந்த பேஸ்புக் பதிவுகள் அனைத்தும் கேரள போலீஸ் சட்டம், 2011 இன் பிரிவு 120 ஓ இன் கீழ் குற்றம் என்று நீதிமன்றம் கருதினால், பேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் அனைத்து பதிவுகளும் குற்றமாக அறிவிக்கப்படும் என்று கருத்து தெரிவித்தது. இருப்பினும், சமூக வலைதளங்களில் அவதூறான பதிவுகள் தொடர்ந்து பரவி வருவதால் இந்த விவகாரத்தை சட்டமன்றம் கவனிக்க வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிடுவது காவல்துறை சட்டத்தின் 12(ஓ) பிரிவின் கீழ் குற்றமாகாது என்று தீர்ப்பளித்தது. மேலும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது