fbpx

சற்றுமுன் முக்கிய அறிவிப்பு…! 23- ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைப்பு…!

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வரும் 23ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று இரவு வரை பல மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வரும் 23ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் நாகர்கோவில் மையத்தில் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைப்புதேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

எந்தவொரு மொபைல் நெட்வொர்க்கையும் கைப்பற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது!… மசோதா அறிமுகம்!

Tue Dec 19 , 2023
நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது அவசர சூழல் போன்ற காரணங்களுக்காக, ‘மொபைல்போன் நெட்வொர்க்’ உட்பட தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை, மத்திய அரசு தற்காலிகமாக தன்வசப்படுத்திக் கொள்ளும் வகையிலான, புதிய தொலைத்தொடர்பு மசோதா, மக்களவையில் நேற்று தாக்கல்செய்யப்பட்டது. இந்திய தந்தி சட்டம், இந்திய கம்பியில்லா தந்தி சட்டம் போன்ற பழைய சட்டங்களுக்கு மாற்றாக, நவீன தொழில்நுட்ப காலத்துக்கேற்ப, தொலைத் தொடர்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா, மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற […]

You May Like