fbpx

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு..!! முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு..!!

தமிழ்நாட்டை தொடர்ந்து, புதுச்சேரியிலும் பள்ளிகள் வருகின்ற 14ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளளார்.

கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வெயில் காரணமாகப் பள்ளி திறப்பு 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கேற்ப அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் முன்னேற்பாடுகள் மேற்கொண்டு வந்தன. ஆனால், அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால் மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி போகும் என்ற என்ற கேள்வி எழுந்தது.

மேலும், வெயில் தாக்கம் குறையாமல் இருந்ததால் பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும் எனவும் குறைந்தது தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்காவது விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் உடனான ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்த நிலையில், 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் நேற்று முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்திருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் இதுகுறித்து முடிவெடுப்பதாகவும் கூறியிருந்தார். இதுமட்டுமின்றி கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் 105 டிகிரியை தாண்டி பதிவாகி வருவதால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் வருகின்ற 14ஆம் தேதி திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

Chella

Next Post

ரயில் விபத்து ஒடிசா சென்ற அதிகாரிகள் குழு…..! இன்று சென்னை திரும்புகிறது …..!

Mon Jun 5 , 2023
ஒரிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து ஒடிசா மாநிலத்துக்கு சென்ற அதிகாரிகள் குழு இன்று சென்னைக்கு திரும்புகிறது. அமைச்சர்கள் உதயநிதி சிவசங்கர் உள்ளிட்டோர் நேற்று சென்னைக்கு வந்த நிலையில், அதிகாரிகள் இன்று இரவு சென்னைக்கு திரும்புகின்றனர். பணீந்திர ரெட்டி, அர்ச்சனா பட்நாயக், குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக ஒடிசாவுக்கு சென்றனர். கோரமண்டல் ரயில் விபத்தில் தமிழர்களின் நிலை தொடர்பான விவரத்தை சேகரிப்பதற்காக தமிழக குழு அங்கு சென்று […]

You May Like