வேலூர் மாவட்டம் காட்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் பேச முற்பட்டபோது மின் தடை ஏற்பட்டுள்ளது. உடனடியாக மின்சாரம் வழங்க போனில் தெரிவித்தும் மின்சாரம் வராததால் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் துரைமுருகன் மைக்கில் உரையாற்றுவதற்காக வந்துள்ளார். ஆனால் , சில விநாடிகளிலேயே ’’பவர் கட் ’’ ஆனது. இதனால் சலிப்பான அவர் , ’’என்ன ஆச்சு ’’ என கேட்க ’’ கரண்ட் போச்சு ’’ என பதில் அளித்துள்ளார். ஆட்சியரிடம் கூறி மின்வாரியத்தை தொடர்பு கொண்டு , உடனடியாக மின்சாரம் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
கரண்ட் வரும் …. வரும் …. என நீணட நேரம் காத்திருந்த அமைச்சர் கடுப்பாகி நிகழ்ச்சியின் பாதியிலேயே கிளம்பிவிட்டார். மின்சாரத்தை உடனடியாக விநியோகிக்காத மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பணிமாற்று ஆணை அனுப்ப உத்தரவிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் தோல்வியடைந்தது மின்சார பிரச்சனைதான். பதவிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகின்றன ஆனால் அது ஒரு மாயை என பதில் அளிக்கின்றார்கள். இன்னும் இந்த பிரச்சனை சரியாகவில்லை என்றால் அடுத்த முறை தேர்தலிலும் இதே பிரச்சனை வரும் … என ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.