fbpx

சக்திவாய்ந்த நிலநடுக்கம்!… ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு!

Earthquake: பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பசுபிக் பெருங்கடல் மீது அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நியூ பிரிட்டன் (New Briton Region Earthquake) மாகாணத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. நிலத்திற்கடியில் 79 கி.மீ ஆழத்தில் மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்க ஆய்வு மையங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதனால் அங்குள்ள பல நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியதைத்தொடர்ந்து, மக்கள் பதறியபடி வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலநடுக்கத்தால் தற்போது வரை சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

Readmore: செம குட் நியூஸ்..!! லைசென்ஸ் வாங்க இனி எங்கும் அலைய தேவையில்லை..!! வீட்டிற்கே வந்துவிடும்..!!

Kokila

Next Post

செம குட் நியூஸ்..!! லைசென்ஸ் வாங்க இனி எங்கும் அலைய தேவையில்லை..!! வீட்டிற்கே வந்துவிடும்..!!

Mon Apr 15 , 2024
தமிழ்நாட்டில் இனி ஓட்டுநர் உரிமங்கள் விரைவு தபால் மூலம் அனுப்பப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்துடன், தமிழ்நாடு அஞ்சல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்துள்ளது. இது கடந்த பிப். 28 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 162 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக வழங்கப்படும் ஓட்டுநர் உரிமம் இனி விரைவு தபால் மூலம் விண்ணப்பதாரரின் […]

You May Like